சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியது இதுவே முதல்முறை. […]