பாஜக அரசு சுயநல அரசியல் லாபத்தை நோக்கி மட்டுமே சிந்திக்கிறார்கள் என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றசாட்டு. விலை உயர்வுக்கு ஊக்கம் அழித்துவிட்டு, தற்போது ஐயோ பணவீக்கம் என்று ஓலம் இடுகிறது மத்திய அரசு என சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மோடி ஆட்சியில் தொடரும் சீரழிவு. வரலாறு காணாத நெருக்கடியில் இந்திய பொருளாதாரம். இந்திய ரூபாயின் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், ஆண்டுக்கு 2 கோடி […]
இந்திய பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் -7.7% ஆக வீழ்ச்சி காணப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 2019-20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 11 ஆண்டுகளில் இல்லாத குறைந்த வளர்ச்சியாக 4.2% ஆக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக நடப்பு 2020-21ல் பொருளாதார வளர்ச்சி -7.7% ஆக சரிவை சந்திக்கும் என தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வீழ்ச்சி என தேசிய புள்ளியியல் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. […]
அசோசெம் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. சரிவில் இருந்து பொருளாதாரத்தை நிலைபெறச் செய்திருக்கிறோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் அசோசெம் அமைப்பின் நூற்றாண்டு விழா தலைநகர் நடந்தது. இந்த கருத்தரங்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.அவர் பேசுகையில், சரிவில் இருந்து பொருளாதாரத்தை நிலைபெறச் செய்திருக்கிறோம் .நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம்.பொருளாதாரத்தை வேகப்படுத்தவும், நவீனமயமாக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி வருகிறோம் . தொழில்துறையினரின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறோம் . விவசாயிகள், […]