இந்தியாவிற்கெதிரான தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி.!

இந்தியாவிற்கெதிரான 5-வது டி-20 போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. நேற்று மும்பையில் நடந்த 5 ஆவது டி-20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆஷ்லி கார்ட்னர் … Read more

இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய மகளிர் அணி

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி  வருகிறது.ஏற்கனவே நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.இப்போட்டியில் ரேணுகா சிங் 10 ஓவர்கள் வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார்.

ரமேஷ் பவார் இந்திய மகளிர் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமனம்..!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவாரை பிசிசிஐ நியமித்துள்ளது. கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி இந்திய மகளிர் அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனத்துக்கு விண்ணப்பங்களை பிசிசிஐ கோரியது. இதற்கு 35 பேர் அதற்காக 35 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தன. சுலக்ஷனா நாயக், மதன் லால் மற்றும் ருத்ரா பிரதாப் சிங் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழு நேர்காணல் செய்து ரமேஷ் பவாரை இந்திய மகளிர் … Read more