வர்கீஸ் குரியன், இவர் பெயர் சொன்னதும் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அமுல் (Amul) எனும் இந்த பெயரை கூறினால் தெரிந்துவிடும். இவர்தான் இந்திய வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர். கிராம புறங்களில் ஹீரோ என பாராட்டப்படுபவர். ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த கேரளாவின் கோழிகோட்டில் பிறந்த இவர், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னை, கிண்டி பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறையிலும் பட்டம் பெற்றார். அதன் பின் அரசு செலவில், […]