ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ராஜோரி மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய போர்நிறுத்த மீறலில் ஒரு இந்திய இராணுவ வீரர் வீர மரணம் அடைந்தார். நவ்ஷெரா செக்டாரில் லாம் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் ஹவல்தார் பாட்டீல் சங்ராம் சிவராஜ் என்ற வீரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, பின்னர், அவருக்கு தொடந்து சிகிக்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி வீரமரணம் அடைந்தார் […]