சென்னை : இந்தியன் ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணிப்பவர்களுக்கு கம்பளி போர்வை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உறையுடன் தலையணை , விரிப்பு ஆகியவை வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போர்வை மற்ற துணி உபகாரணங்களை முறையாக ரயில்வே நிர்வாகம் சுத்தம் செய்து தர வேண்டும். அதற்கும் சேர்த்து தான் டிக்கெட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. அப்படி, வசூல் செய்யப்படும் தொகை முறையாக செலவு செய்யப்படுகிறதா.? முறையாக தலையணை உறை, காட்டன் போர்வைகள், கம்பளி போர்வைகள் முறையாக சுத்தம் செய்யப்படுகிறதா […]
டெல்லி : கடந்த ஒலிம்பிக் தொடரில் மல்யுத்த போட்டியில் இறுதி போட்டி வரை சென்று 100 கிராம் எடை கூடியதால் பதக்கத்தை இழந்தார் வினேஷ் போகத். பதக்கத்தை இழந்தாலும், இந்திய மக்கள் மத்தியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கான வரவேற்ப்பை அவர் பெற்றார். பதக்கத்தை இழந்த வினேஷ் போகத், தன்னால் இதற்கு மேல் போராட வலிமையில்லை எனக் கூறி மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன்பிறகு, வினேஷ் மற்றும் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் […]
இந்தியன் ரயில்வே: இந்திய நாட்டில் இருக்கும் நாம் ரயிலை தவற விட்டு விட்டோம் என்றால் என்ன செய்யலாம்? அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? என்பதை பற்றி இதில் பார்க்கலாம். இந்தியாவில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதில் பலரும் சரியான நேரத்தில் ட்ரெயினை தவற விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன்? இதை படிக்கும் நீங்களும் கூட அதில் ஒருவராக இருக்கலாம். ட்ரெயினை தவறவிட்டு அந்த டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தில் […]
3 கோடி பயணிகளின் தகவல் ஆன்லைனில் கசிந்ததாக வெளிவந்த தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்று, அதிலிருந்து 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர், ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறினார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், […]
3 கோடி ரயில் பயணிகளின் தகவல்களை, ஹேக்கர் ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்றுள்ளது, 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய […]
ரயில்வே தனது டிவிட்டர் பக்கத்தில் ஹிந்தியில் செய்தியை பகிர்ந்ததை விமர்சனம் செய்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவீட் செய்துள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை எம்.பி சுவெங்கடேசன் அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இது ஹிந்தியவா? இந்தியாவா? ஹிந்தி திணிப்பை கைவிடுங்கள் என பதிவிட்டுள்ளார். அதாவது, இந்திய ரயில்வே துறை தனது டிவிட்டர் பக்கத்தில், ரயில்வே ஆட்சேர்பு தொடர்பாக யாரிடமும் ஏமாற வேண்டாம். அது உங்களை தகுதியற்றவர்களாக மாற்றிவிடும்’ என பொதுவான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]
1999-ல் துங்கநாத் சதுர்வேதி தனது சொந்த ஊரான மதுராவில் இருந்து மொராதாபாத்திற்கு ரயிலில் செல்ல இரண்டு டிக்கெட்டுகளை வாங்கினார், ஒரு டிக்கெட்டின் விலை 70க்கு பதிலாக ரூ.90 வசூலிக்கப்பட்டு, அவருக்கு ரசீது வழங்கப்பட்டது. ஆனால் மாநில இரயில்வே அதிகாரிகள் அவருக்குப் பணத்தைத் திரும்பப்பெற மறுத்துவிட்டனர். இழப்பீடுக்காக அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். அவருக்கு இழப்பீடு வழங்கப்படுவதற்கு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக ஐந்து வெவ்வேறு நீதிபதிகள் முன் […]
மதுரை:தமிழகத்தில் 9 புதிய ரயில் வழித்தடத்திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிப்பதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழக புதிய ரயில் வழித்தடத் திட்டங்களுக்கும் புதிதாக சேர்க்கப்பட்ட இரட்டை பாதை திட்டங்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்து திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: வெறும் ஆயிரம் ரூபாய்: “மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து PINK Book என்று […]
ரயில்வே துறையில் 5-ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதனால்,அடுத்த 5 ஆண்டுகளில் சிக்னல் நவீனமயமாக்கல் மற்றும் ரயில்வேயில் 5 ஜி ஸ்பெக்ட்ரம் சேவையை செயல்படுத்த 25,000 கோடி ரூபாய் செலவிடப்படும்,என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு […]
ஏறக்குறைய 22 மாதங்களில் ரயில் விபத்துக்களால் ஒரு பயணிகள் கூட இறக்கவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் உள்ள ரயில் பாலங்களின் நிலை குறித்து பேசிய திரு கோயல், “கடந்த 6 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்பு குறித்து அதிக அளவில் கவனம் செலுத்தியுள்ளோம். ரயில் விபத்து காரணமாக கடைசியாக பயணிகள் இறந்தது மார்ச் 22, 2019 அன்று நடந்தது. ஏறக்குறைய 22 மாதங்களில், ரயில் விபத்துக்களால் ஒரு […]
பயிற்சி பெற்றுவர்களுக்கு (அப்ரெண்டிஸ்) 1,03,769 காலியிடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல் படி: அப்ரெண்டிஸ் சட்டத்திருத்தின் படி, ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 % காலியிடங்களான 20,734 காலியிடங்களை பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 2017 ம் ஆண்டு மார்ச்சில் விலக்கப்பட்ட இவ்வதிகாரத்தை திரும்ப அளிக்க அப்ரெண்டிஸ் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் திறந்தவெளி […]
ரயில்களுக்கு சென்னை பெரம்பூரில் உள்ள ஐ சிஎப் ஆலை ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்கி வருகிறது. இந்நிலையில், 44 வந்தே பாரத் ரயில்களுக்கான 704 பெட்டிகளை தயாரிக்க ஐ.சி.எப், ஆலைக்கு ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி பெட்டிக்காக சில மின் உதிரி பாகங்களை வாங்க கடந்த டிசம்பரில் உலகளாவிய டெண்டரை ஐசிஎப் அறிவித்தது. கடந்த மாதம் டெண்டரில் 6 நிறுவங்கள் கலந்து கொண்டனர். அதில், ஏலத்தில் பங்கேற்ற ஆறு நிறுவங்களில் ஐந்து நிறுவனங்கள் அரசுக்கு சொந்தமான பாரத் […]
ஒருவர் எந்த மண்டல ரயில்வேக்கு விண்ணப்பிக்கிறாரோ, அதனை பொறுத்தே அவருக்கு பணி நியமன மண்டலம் ஒதுக்கப்படுகிறது – தெற்கு மண்டல ரயில்வே நிர்வாகம். கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ரயில்வே தேர்வில் வெற்றியடைந்து, அதில் தேர்ச்சி பெற்ற 541 பேருக்கு திருச்சி பொன்மலை ரயில்வே நிலையத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது. இதில் 40 பேர் மட்டுமே தமிழர்கள். இதனால் ரயில்வே தேர்தலில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு உடனடியாக வேலை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் ரயில்நிலைய ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பினாவில் இயங்கி வரும் ரயில்நிலையத்தில் தற்போது அதெற்கென தனி சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதன் மூலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் இயங்க உள்ளது. இதுவரை எந்த நாட்டிலும், ஒரு ரயில் நிலையத்திற்கென தனி சூரிய ஒளி மின் […]
ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு இந்திய ரயில்வே துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேதுறையில் அதிகமான தொழிலாளர்களை கொண்ட ஒரு அரசு துறையாகும்.இதில் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் ரயில்சேவையானது முடங்கியது. தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதார ரீதியில் அத்துறையானது பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் 50 சதவீத காலியிடங்களை குறைக்கவும், […]
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்களை அந்தந்த ரயில்வே கவுண்டர்களில் நாளை முதல் வாங்கிக்கொள்ளலாம் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மே 31-ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ளது. இந்நிலையில், ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் முதல் கட்டமாக இயக்கப்பட உள்ளது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருந்தார். இந்த ரயிலுக்கான கால அட்டவணை இந்திய ரயில்வே நிர்வாகம் வெளியிட்டது. ஜூன் 1 முதல் ஏ.சி. […]
சிறப்பு ரயிலில் செல்லுபடியாகாத டிக்கெட்டில் பயணம் செய்ததாக ஒரு குடும்பத்திற்கு ரூ.32 ஆயிரம் அபராதம் விதித்த இந்தியன் ரயில்வே. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் தவித்தனர். பின் அரசு சிறப்பு ரயிலை இவர்களுக்காக இயக்கியது. இதில், டெல்லியில் இருந்து 15 ஜோடி சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு கடந்த 11-ம் தேதி முதல் இயக்கப்பட்டு […]
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொது போக்குவரத்தான ரயில், விமானம், பேருந்து ஆகியவை தற்போது இயங்கவில்லை. முன்னதாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர்தான் பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதனால் ரயில் பயணிகள் ஏப்ரல் 14 க்கு பிறகு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகள் தற்போது ரத்து செய்யப்பட்டு, பயணிகளிடம் பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில் முன்பதிவு […]
தமிழகத்தில் 3 பயணிகள் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. இந்த ரயில் சேவையை மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் காணொளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்துள்ளார். சேலம்-கரூர், பழனி-கோவை, பொள்ளாச்சி-கோவை ஆகிய மூன்று பயணிகள் ரயில் சேவையை பியூஸ் கோயல் தொடங்கி வைத்தார். 1. சேலம் – கரூர் (வண்டி எண் : 76801/76802) சேலத்தில் இருந்து பகல் 1:45 புறப்பட்டு, மாலை 3:25 சென்றைடயும். இதேபோல் கரூரில் இருந்து காலை 11:40 புறப்பட்டு, […]
உலகிலேயே இரண்டாவது பொதுத்துறை நிறுவனமாக விளங்கும் இந்திய ரயில்வே நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசானது திட்டமிட்டுள்ளது.இதனால் விமானம், பேருந்து, பொது போக்குவரத்துகளில் உள்ளது போல ரயில்வே துறையிலும் தனியாரின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று தெரிகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினமும் பயன்படுத்தி வரும் ரயில்கள் இனி பயன்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகும். இதன் முதல் கட்டமாக, பயணிகள் எண்ணிக்கை குறைவாக உள்ள ரயில்களையும் மற்றும் […]