பாரிஸ் : நடப்பு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இதுவரை இந்தியா 3 வெண்கலம் மட்டுமே வென்று உள்ளது. இப்படி இருந்த சமயத்தில் இந்தியாவுக்கு மல்யுத்த விளையாட்டுப் பிரிவில் கூடுதலாக ஒரு பதக்கம் அதுவும் தங்க பதக்கம் வெல்லும் வாய்ப்பு நிலவியது. 50 கிலோ எடைப்பிரிவில் பெண்கள் மல்யுத்த இறுதி போட்டிக்கு வினேஷ் போகத் முன்னேறி இருந்தார். அதனால் முயற்சித்தால் தங்கப்பதக்கம் நிச்சயம் வெள்ளி பதக்கம் என்ற நிலை இருந்தது. இப்படியான சூழலில் தான் நிர்ணயிக்கப்பட்ட எடையை விட […]
இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) நேற்று ரகுராம் ஐயரை இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒரு வருடமாக தலைமை நிர்வாக அதிகாரி( CEO) பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்கம் நியமனக் குழுவால் நடத்தப்பட்ட தேர்வு செயல்முறைக்குப் பிறகு ரகுராம் ஐயர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக ஐஓஏ தெரிவித்துள்ளது. கவனமாக பரிசீலித்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுடன் நேர்காணலுக்குப் பிறகு, நியமனக் குழு ஒருமனதாக ரகுராம் ஐயரை […]
மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பிரிட்ஜ் பூஷன் சிங் மீது பல வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த தேர்தலில் நிற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, பிரிட்ஜ் பூஷன் சிங் நண்பரான சஞ்சய் குமார் மல்யுத்த தலைவர் தேர்தலில் நின்றார். சமீபத்தில் மல்யுத்த தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் சஞ்சய் குமார் வெற்றி பெற்று […]
பி.டி.உஷாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்விட். சமீப நாட்களுக்கு முன் இவர் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக போட்டியிட வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தினால் பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், […]
இந்தியா ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படுபவர் பி.டி.உஷா. இவர் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும் நாட்டின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, அர்ஜுனா விருதுகளையும் பெற்றுள்ளார். சமீப நாட்களுக்கு முன் இவர் பாஜக சார்பில் மாநிலங்களவை நியமன உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் 58 வயதான பி.டி.உஷா இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் […]
22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்திலுள்ள பர்மிங்காமில் 2022 -ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இருந்து துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப் பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரவண்டா நாட்டின் தலைநகர் கிஜா லியில் வருகின்ற செப்டம்பர் மாதம் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு சம்மேளன பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பது வேண்டும். என்று காமன்வெல்த் விளையாட்டு சம்மேளனத்தின் மண்டலத் துணை தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த இந்திய ஒலிம்பிக் சங்க […]