நிலநடுக்கம் : இந்திய பெருங்கடலில் திடீரென தென்னாப்பிரிக்காவிற்கு அருகே 6.7 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து சுமார் 2,216 கி.மீட்டர் தூரத்தில் இந்திய பெருங்கடலில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இன்று காலை 10.25 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவாகி இருந்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கொடுத்த தகவலின் படி, அதிகாரிகளால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை […]
சென்னை: இந்திய பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம் திடீரென 1.8 கிமீ தூரத்திற்கு கிழே பறந்தது. கடந்த மே 20ஆம் தேதி லண்டன் ஹீத்ரோவில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ32 போயிங் 777 300ER புறப்பட்டது. அப்போது (மே 21) இந்திய பெருங்கடல் பகுதியில் ஜரவாதி படுகையில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீரென 3 நிமிடத்தில் 1800மீட்டர் (1.8 கி.மீ) தூரம் கீழே சரிந்துள்ளது. இந்த திடீர் சரிவில், […]
NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர். போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் […]
தமிழகத்தில் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (31.12.2023) திருநெல்வேலி மற்றும் […]
இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும். இதன் காரணாமாக தமிழகத்தில் இன்று (30.12.2023) மற்றும் நாளை (31.12.2023) ஆகிய நாட்களில் திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று திருநெல்வேலியின் பல பகுதிகளில் 20 […]
இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுபகுதி காரணமாக வரும் ஜனவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக […]
இந்தியப் பெருங்கடலில் சுற்றி திரியும் சீன உளவு கப்பல் “யுவான் வாங் 5” கண்டுபிடிக்கப்பட்டது. யுவான் வாங் 5 எனும் சீன உளவு கப்பல் பல்வேறு ஏவுகணைகள் மற்றும் கண்காணிப்பு சாதனங்களுடன் பொருத்தப்பட்டு இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கப்பலானது இந்தியாவின் வங்காள விரிகுடாவில் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை ஏவுவதற்கான சோதனைக்கான திட்டத்திற்கு முன்னதாக இந்திய பெருங்கடலில் நுழைந்தது. இந்தக் கப்பல் கடைசியாக இந்தோனேசியாவின் சுந்தா ஜலசந்தியில் காணப்பட்டதாக கூறப்படுகிறது. […]
இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்தது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன ஆய்வுக் கப்பலைக் கண்காணித்தன. யுவான் வாங் வகுப்பு ஆராய்ச்சி கப்பல் கடந்த மாதம் மலாக்கா ஜலசந்தியில் இருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன கடற்படை […]