பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேரை காணவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரிகள் 2 பேரை கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது .இந்திய தூதரக அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அண்மையில் சிலர் நடந்து கொண்டனர்.இதனிடையே சில வாரங்களுக்கு முன் இந்தியாவில் உளவு பார்த்ததாக பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் நாடு கடத்தப்பட்டனர்.