இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் விரைவில் திருமணம்

கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் 2023 ஜனவரியில் சுனில் ஷெட்டியின் கண்டாலா பங்களாவில் திருமணம் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் காதலித்து வரும் நிலையில், தற்போது இந்த ஜோடி அவர்களின் உறவில் அடுத்தக்கட்ட நிலைக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலோ இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவானது கண்டாலாவில் உள்ள அதியாவின் தந்தை … Read more

10-ம் வகுப்பிலே டெல்லி மாநில கேப்டனான “கிங்” கோலி.. இணையத்தில் வைரலாகும் சுற்றறிக்கை!

விராட் கோலி 10-ம் வகுப்பு படிக்கும்போது அவர் டெல்லி மாநில அண்டர்-15 அணியின் கேப்டன் என்று அறிவிக்கப்பட்ட சுற்றறிக்கை, தற்பொழுது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக வலம்வருபவர், விராட் கோலி. இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் “கிங் கோலி” என்று அழைக்கப்படும் இவர், தனது 15 வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கினார். மேலும், 2011 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக்கோப்பையை கைப்பற்ற கோலி முக்கிய பங்கு வகித்தார். விராட் கோலி, … Read more

போடு தகிடதகிட…55 பந்துகளில் 158 ரன்கள் தெறிக்கவிட்ட பாண்டியா!

மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 போட்டியில் விளையாடி வருகின்ற இந்திய வீரர் பாண்டியா 55 பந்துகளில் 158 ரன்களை அடித்து நொறுக்கி  பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.  இந்திய வீரர் மற்றும் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. சிகிச்சைக்குப் பிறகு தனது  பயிற்சியைத் தொடங்கிய ஹாா்திக் பாண்டியாவிற்கு பந்துவீச்சு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் தோ்ச்சி பெறாததால் … Read more

டி-20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு ! இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் அறிவிப்பு

டி -20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மிதாலி ராஜ் ஒய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் மிதாலி ராஜ் (வயது 36), கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கருக்கு நிகராக போற்றப்படுகிறார். 1999ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமான மிதாலி ராஜ் தன் அறிமுகப் போட்டியிலேயே சதமடித்து (114* ரன்கள்) இந்தியாவை வெற்றிபெறச் செய்தார். இந்திய மகளிர் கிரிக்கெட்டை உலக அரங்கில் பிரபலமடையச் செய்ததில் மிதாலி ராஜ் முக்கியப் பங்காற்றியுள்ளார்.கடந்த … Read more