நேற்று காஷ்மீர் பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்த விதியை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். இன்று காலை முதல் இந்திய பதிலடி கொடுத்து வருகிறது. இதில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்தனர். இந்தியா ,பாகிஸ்தானுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் உள்ளது.ஆனால் காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், ஜம்மு – […]
இந்தியா அமைதியை விரும்புவதால், ஜம்மு காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு-காஷ்மீரிலும், இந்திய எல்லையிலும் ராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருவதாக என்று ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். அப்பகுதிகளில் அமைதி நிலவுவது தொடர்ந்தால் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தால் ராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்படும் […]
சி.ஆர்.பி.எப் வீரர்கள் 9 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் ((kistaram)) வனப்பகுதியில், மாவோயிஸ்ட்டு தேடுதல் வேட்டையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நக்சலைட்டுகளுடன், துப்பாக்கி சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதிக்கு கூடுதலாக துணை ராணுவப்படை […]
3 தீவிரவாதிகள் காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அனந்த்நாக் மாவட்டத்தின் ஹக்கூரா (Hakoora) என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டனர். அப்போது மறைவிடத்திலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர். இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த தீவிரவாதிகளில் இருவர் ஈசா ஃபசிலி (Eesa Fazili) சையத் ஓவைஸ் (Syed Owais) என்று தெரிய வந்துள்ளது. […]
ஜம்மு காஷ்மீரின் கோட்லி பகுதியில் உள்ள ஜன்ட்ரோட் என்ற இடத்தில் எல்லைக்கு அப்பால் இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படுகிறது. போர் நிறுத்த ஒப்பந்ததை மீறி பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதால் இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி நடவடிக்கையில் இறங்கினர். இந்திய ராணுவ வீரர்களின் பதிலடி துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.