இந்தியா – பாகிஸ்தான் இடையே வார்த்தைப் போரை நாங்கள் பார்க்க விரும்பவில்லை என அமெரிக்கா கருத்து. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே “ஆக்கபூர்வமான உரையாடலை” மட்டுமே காண விரும்புகிறோம் என அமெரிக்க கூறியுள்ளது. இரு நாடுகளுடனும் நாங்கள் தொடர்பு வைத்துள்ளதால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வார்த்தைப் போரைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றும் உரையாடல் என்பது இந்தியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்களின் நலனுக்கானது எனவும் என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக் -கிடையேயான உறவு மிக மோசமடைந்துள்ளது என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு […]