44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி,தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக,ஆண்கள் பிரிவில் 188 அணிகளும்,பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்கின்றன.இந்நிலையில்,செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில்,தமிழகத்தை சேர்ந்த வீரர்களான கார்த்திகேயன்,சேதுராமன் ஆகியோர் […]