குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு நொய்டாவில் நவம்பர் 2 வரை, ட்ரோன் கேமராக்களை பறக்க தடை விதித்துள்ளது. நவ-1 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கவுதம புத்தநகரில் நடைபெறவுள்ள ஏழாவது “இந்தியா தண்ணீர் வாரம்” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வருகை தரவுள்ள இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பாதுகாப்பு கருதி நொய்டாவில் ட்ரோன் கேமராக்களை பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர். தடையை மீறி செயல்பட்டால் இ.பி.கோ பிரிவு […]