இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதனுடைய முதல் போட்டி கடந்த 11-ஆம் தேதி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற உள்ள இரண்டாவது போட்டயில் இந்தியா விளையாடுகிறது. இந்த இரண்டாவது போட்டி நாளை இந்தூரில் இருக்கும் ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. […]