ஈவு இரக்கம் இல்லாத மனித நேயம் அற்ற தீவிரவாதிகளை களை எடுக்க கூட தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என யாராவது கூறுவார்களா? என நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சியினரை இவ்விவகாரம் குறித்து கடுமையாக தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இந்நிலையில்,தற்போது 7-ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரையில் பிரதமர் நரேந்திரமோடி தீவிரம் காட்டி வருகிறார். இவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் குஷிநகரில் நடைபெற்ற பாஜக தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர், […]
தற்போது பிரபல பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் பிரதமர் மோடி தலைமையிலான் அரசை விமர்சித்தும் பிரதமர் மோடியை இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என்ற சர்ச்சை தலைப்பில் பிரபல பத்திரிக்கையில் கட்டுரை வெளிவந்து இந்திய நாட்டை மட்டுமள்ள அகில உலகையே அதிர செய்தது.இந்த இந்தியாவை துண்டாடும் வகையில் கட்டூரை எழுதியவர் பாகிஸ்தானியர் என்றும், பிரதமர் மோடியின் புகழை கெடுக்க அவர் முயற்சித்துள்ளார் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறியுள்ளார். அமெரிக்காவில் வெளியாகும் பிரபல பத்திரிகை நிறுவனம் […]
இந்தியாவின் சொர்க்கமாக கருதப்படும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாதிகளும் தீவிரவாதிகளும் அம்மாநிலத்தில் அமைதியை சீர்குலைத்து வருகின்றனர்.இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.இந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார்.இந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட பயங்கரவாதி ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டை அடுத்து , ஐஎஸ் அமைப்பு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது அது ஐஎஸ் அமைப்பின் செய்தி இணையதளமான […]
பதான்கோட் விமானப்படை தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் உறவு மிகவும் மோசமாடைந்தது வருகிறது.இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று அங்கு இருந்த தீவிரவாத முகாம் மீது குண்டு வீசி தாக்கி அளித்தது.இதனால் இரு நாட்டிற்க்கும் இடையே போர் மூழும் சூழல் ஏற்ப்பட்டது.பாகிஸ்தான் தரப்பில் இந்திய விமான வீரரை கைது செய்து பின் விடுவித்தது. எனினும் காஷ்மீர் எல்லையில் அவ்வ போது தாக்குதல் நடத்துகிறது.இந்நிலையில் பாகிஸ்தான் வழியாக இந்திய வான் எல்லை பரப்பிற்க்குள் அத்துமீறி நுழைந்த […]
இந்தியாவில் தேர்தல் திருவிழா தற்போது நடைபெற்றுவரும் நிலையில்,மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளில் 5 கட்டங்கள் தற்போது வரை நிறைவடைந்ததுள்ளது.எஞ்சிய இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே நடைபெறவுள்ளன.அந்த 6 மற்றும் 7-ம் கட்ட தேர்தல்கள் விரைவில் நடைபெற உள்ளது.அதன் முடிவுகள் வரும் 19-ம் தேதியோடு நிறைவடையும் வாக்குப்பதிகள் மொத்தமாக 23-ம் தேதி எண்ணப்படுகின்றன.இம்முறை ஆட்சியை பிடிக்க காங்கிரசும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜ.வும் தற்போது வரை சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், ஹரியானா மாநிலம் சிர்ஸாவில் பேசிய […]
இந்தியாவில் மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் எழு கட்டமாக நடந்து வரும் தேர்தலுக்கு வருகிற மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே முடிவுகள் வெளியிடப்படும். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், அனைத்து கட்சிகளும் படு சுறுசுறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் அணைத்து எதிர்க்கட்சிகளும் கூடி முக்கிய முடிவு எடுக்க உள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் மே 23இல் வெளியாக உள்ள நிலையில் இந்த கூட்டம் […]
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வதற்காக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 200 தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு ஒரு இடம் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் […]
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடியும் வெல்ல மாட்டார், பாஜகவும் வெல்லாது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி மீது, இளைஞர்களும், விவசாயிகளும் அதிருப்தியடைந்துள்ளதாகவும், வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மோடி தோல்வியடைந்து விட்டார் எனவும் கூறினார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பறிகொடுத்துள்ளது. 40 தொகுதிகள் கொண்ட மிசோரமில், 26 இடங்களில் மாநில கட்சியான மிசோ தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ளது. மிசோரமில் ஆட்சியை இழந்ததன் மூலம், வட கிழக்கில் ஆட்சி செய்த ஒரே மாநிலத்தையும் காங்கிரஸ் இழந்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் – பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் சம நிலையில் உள்ளதால், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவை பெறுவதில் இரு கட்சிகள் இடையே போட்டா போட்டி ஏற்பட்டுள்ளது. 230 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஆட்சி அமைக்க 116 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 13 ஆண்டுகளாக பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த மத்திய பிரதேசத்தில், தற்போது காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் சமநிலையில் உள்ளன. அதே நேரம் பகுஜன் […]
பிரதமரின் பொருளாதார ஆலோசகர் சுர்சித் பால்லா ராஜினாமா செய்துள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல் தற்போது ராஜினாமா செய்துள்ளார். மத்திய அரசு தொடர்ந்து மோதல் போக்குடன் இருப்பதால் தற்போது இவர் ராஜினாமா செய்துள்ளார் . மத்திய அரசு இதுபோன்ற அடாவடி நடவடிக்கைகளில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அற்புதமாக செயல்பட்டு வந்த ரகுராம் ராஜனை நீக்கிவிட்டு புதிதாக இவரை நியமித்தது. இவரையும் மத்திய அரசு […]
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டக் தொடரில், ரஃபேல் விமான ஊழல் புகார், சிபிஐ அதிகாரிகள் மாற்றம், ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்து அமைப்புகள் வலியுறுத்துவது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய, முழுமையான கூட்டத்தொடரான இந்த கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில், மறைந்த பிரதமர் வாஜ்பாய் மற்றும் மத்திய அமைச்சர் அனந்த குமார் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, […]
5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. சட்டிஸ்கர், மிசோரம், ராஜஸ்தான், மத்திய பிரதேஷ், தெலுங்கானா மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளது.ஆனால் ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 2 மாநிலங்களில் ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது.பாஜக-காங்கிரஸ் இடையே நேரடியாகவே இந்த மாநிலங்களில் போட்டி நிலவியது. இந்நிலையில் இன்று தான் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.