விவசாய பயிர்கள் வெட்டுக்கிளி தாக்கி பாதிப்பு. வினோத முறையில் கோரிக்கை விடுத்த எம்எல்ஏ. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெல்லட் தலைமைலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மாநிலத்தில் விவசாய பயிர்களை வெட்டுக்கிளிகள் தாக்கியதால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்காக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கூடை நிறைய வெட்டுக்கிளிகளுடன் பாஜ எம்எல்ஏ வினோதமாக வந்து அரசிற்க்கு கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்த பிகானெர் தொகுதி பாஜ எம்எல்ஏ பிகாரிலால் , ‘‘வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக […]
கடந்த 2018-19ம் ஆண்டில் இந்தியாவிலேயே காய்கனிகள் உற்பத்தியில் மேற்கு வங்க மாநிலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மத்திய அரசு தோட்டகலைத்துறை விளைச்சல் பற்றிய புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 2018-19ம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் மொத்தம் 29.55 மில்லியன் மெட்ரிக் டன் அளவிற்கு காய்கனிகளை உற்பத்தி செய்துள்ளது முதலிடம் பிடித்துள்ளது. இதேபோல், கடந்த 2017-18ம் ஆண்டில் மேற்கு வங்கம் இரண்டாவது இடத்தில் இருந்தது இந்நிலையில் இந்த ஆண்டில் முதலிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நாட்டின் மொத்த […]
ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் கடன் விவகாரம் குறித்த பத்திரிக்கையாளர்கள் கேள்வி. மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அதிரடி கருத்து. சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்ட மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் அவர்களிடம், மாநாட்டின் இடையே, அவரிடம், ஏர் இந்தியா விமான நிறுவனம் மற்றும் பிபிசிஎல் உள்ளிட்ட பொதுத்துறை […]
இந்தியாவில் குழந்தைகள் நல அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் தேசிய வீரதீர விருதுக்கான சிறுவர், சிறுமிகளை தேர்வு செய்து வருகிறது. இந்த முறை விருது பெறும் வீர தீரர் உங்களுக்காக. இந்நிலையில், கடந்த 2019 ம் ஆண்டிற்கான இவ்விருது 10 சிறுமிகள் மற்றும் 12 சிறுவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள், இக்கட்டான சூழலில் பல்வேறு உயிர்களை காப்பாற்றியவதற்க்காக இவ்விருது பெறுகின்றனர். இதன் மூலம் சிறுவர்களிடையே வீரதீர செயல், மற்றவர்களுக்கு உதவும் பண்பும் மணப்பாண்மையும் வளர்கிறது.கேரளாவை சேர்ந்த இவ்விருது பெற்ற […]
பிரேசில் நாட்டுடனான ஒப்பந்தத்திற்க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல். இரு நாடுகளின் உறவு மேலும் சிறக்கும் என எதிர்பார்ப்பு. தலைநகர் புது டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் குற்றவியல் விஷயங்களில் பரஸ்பர சட்டஉதவிகளைப் பகிர்ந்து கொள்வதற்காக , இந்தியா மற்றும் பிரேசில் நாட்டிற்க்கு இடையே கையெழுத்தாக உள்ள ஒப்பந்தத்திற்கு அமைச்சரவையின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில், இரு நாடுகளுக்கிடையேயான குற்றங்கள், தீவிரவாதத்துடனான தொடர்புகள், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குதல் போன்ற […]
பல்வேறு குற்ற செயலில் ஈடுபட்ட மாவோயிஸ்டு சரண்டர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தார். ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாவட்டத்தில் கமர்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஓர் இளம்பெண் தீவிரவாத இயக்கத்தில் இருந்து மீண்டுள்ளார். கர்மபள்ளி கிராமத்தை சேர்ந்த ஆத்மி மத்கமி (22). இவர் கடந்த 2015-ம் ஆண்டு மாவோயிஸ்ட் இயக்கத்தில் இணைந்தார். இதையடுத்து, ஆத்மி மத்கமி கொலை, துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரது தலைக்கு 2 லட்ச ரூபாய் சன்மானமாக அரசால் […]
தெற்கு ரயில்வே புதிய அறிவிப்பு. புதிதாக 68 சிறப்பு ரயில்கள் இயக்கம். சென்னை முதல் கோவை மார்க்கத்தில் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக 68 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரெயில்வே தற்போது அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரெயில்வே இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை முதல் கோவை இடையே 2 குளிரூட்டப்பட்ட ரெயில் பெட்டிகளுடன் கூடிய சிறப்பு ரெயில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 31 ஆம் […]
இந்தியாவில் ஆண்டுதோறும் அறிமுகப்படுத்தப்படும் பட்ஜெட் குறித்த சிறப்பு தொகுப்பு. அன்று முதல் இன்று வரை அனைத்தும் கீழே. இந்தியாவில் முதன்முறையாக பட்ஜெட் 1860-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ம் தேதி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த கிழக்கிந்திய கம்பெனி தான் அறிமுகம் செய்தது. அப்போது இந்திய நிதி கவுன்சிலின் உறுப்பினர் ஜேம்ஸ் வில்சன் என்பவரது ஆலோசனையின் பேரில் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது வரை இந்த நிகழ்வு ஆண்டு தோறும் கடைபிடித்து வருகிறோம். […]
இந்தியாவின் குடியுரிமை சட்டம் தேவையில்லாதது என அண்டை நாட்டு பிரதமர் கருத்து. எனினும் இது இந்தியாவின் உள் விவகாரம் எனவும் கருத்து. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குடியுரிமைச் சட்டமானது நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தலால் வெளியேறும் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதில் முஸ்லிம்களைத் தவிர்த்து இந்து, சீக்கிய, புத்த, சமண, பார்ஸி மற்றும் கிறிஸ்தவர்கள் என 6 மதங்களைச் சார்ந்தவர்களுக்குக் […]
சீனாவில் பரவி வரும் புதிய உயிர்கொல்லி வைரஸ். இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடக்கம். பொதுவாகவே வைரஸ் நுண்ணுயிரிகள் தங்களின் உருவ அமைப்பை அடிக்கொருமுறை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இந்த வைரஸ் நுண்ணுயிரிகளுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு நம் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவிய, கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸ் மூலம் உலகளவில் சுமார் 700 பேர் வரை உயிரிழந்தனர். இந்த வைரஸ் […]
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் நான்கு மீனவர்கள் கைது. பொங்கல் முடிந்து திரும்பியவர்களுக்கு இலங்கை கொடுத்த பொங்கல் பரிசு. தை பொங்கல் சிறப்பாக நிறைவடைந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியில் இருந்து, நேற்று காலை 96 விசைப்படகுகளில் மீன்வள துறை அலுவலக அனுமதியுடன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது நள்ளிரவு 2 மணியளவில் இலங்கை கடற்படைக்கு […]
பி டெக் பட்டதார் கோவிலில் பிச்சைகாரராக இருந்த உண்மை சம்பவம். காவல்துறையினரின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள். ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்கிறது. இங்குள்ள பிரபல புரி ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் தான் இந்த வியக்க வைக்கும் நிகழ்வு அரங்கறியுள்ளது. புரி ஜெகன்னாதர் கோவில் வளாகத்தில் பிச்சை எடுப்பவர் கிரிஜா சங்கர் மிஸ்ரா. இவர் வழக்கமாக தினமும் பிச்சை எடுக்கும் இடத்தில், ஒரு ரிக்ஷாக்காரர் தனது வாகனத்தை […]
சாலை விபத்தில் பிரபல நடிகை படுகாயம். எம்.ஜி.எம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. இந்தியாவில் பாலிவுட் திரையுலகின் பழம்பெரும் நடிகையான சபானா ஆஸ்மி இவரது வயது 69. இவர் மகாராஷ்ட்டிரத்தின் ராய்காட் மாவட்டத்தில் மும்பை-புனே விரைவு சாலையில் காரில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது மும்பையில் இருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள காலாப்பூர் அருகே இன்று மாலை சரியாக 3மணி .30நிமிடத்தில் சென்று கொண்டிருந்த போது அவரது கார், லாரி ஒன்றின் மீது மோதி […]
காஷ்மீர் விவகாரம் குறித்த ரஷ்யாவின் நிலைப்பாட்டை ரஷ்யா அறிவித்தது. காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய சீனாவிற்க்கு மூக்குடைப்பு.. ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தை சீனா ஐநா சபையில் எழுப்பி மூக்கு உடைந்த விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இதுகுறித்து இந்தியாவின் நீண்டகால நண்பனான ரஷ்யா தனது நிலைப்பாடை தெளிவாக முன்வைத்துள்ளது. இதில், காஷ்மீர் விவகாரம் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான உள்நாட்டு பிரச்னை, அதில், ரஷ்யாவுக்கு எந்த சந்தேகமும் இல்லை’ என, இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் நிகோலே குடாஷெவ் […]
வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்ட ஜிசாட்-30. இந்த வெற்றிக்காக பிரதமர் மோடி இஸ்ரோவிற்க்கு வாழ்த்து. நேற்று காலை( ஜனவரி 17-ஆம் தேதி )துள்ளியமாக கூறினால் அதிகாலையில் 2.35 மணியளவில் இந்தியாவின் தொலைதொடர்பு மற்றும் ஒளிபரப்பு சேவைகளுக்கான, ‘ஜிசாட் – 30’ என்ற செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கை கோள் தென் அமெரிக்காவின் பிரென்ச் கயானாவின் கோரோ பகுதியில் உள்ள ஏரியன் விண்வெளி தளத்திலிருந்து ‘ஜிசாட் – 30’ மற்றும் இடுல்சாட் என்ற விண்வெளி நிறுவனத்தின், ‘இடுல்சாட் […]
நிறைவு பெற்றது இந்திய-ஜப்பான் கடலோர காவல் படையின் கூட்டு பயிற்சி. இதில் பாதுகாப்பை பலப்படுத்த தலைமை இயக்குனர் புதிய அறிவிப்பு. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கைபற்றினர். இந்த விவகாரத்தில் இந்திய கடலோர காவல்படை அதிரடியா செயல்பட்டு அந்த கப்பலை மீட்டது. இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா – ஜப்பான் கடலோர காவல்படையின் கூட்டுபயிற்சி வங்க கடலில் நடந்தது வருகிறது. இந்த ஆண்டுக்கான இந்தியா-ஜப்பான் 19வது கூட்டுப்பயிற்சி […]
இந்தியா ஒரு இந்துத்துவா தீவிரவாத நாடு. காஷ்மீர் விவகார தோல்வியில் பாகிஸ்தான் பிரதமர் புலம்பல். இந்தியாவின் ஒரு மாநிலமான காஷ்மீருக்கான 370 வது சட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு நமது அண்டை நாடான பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும்,பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபையிலும், உலக வல்லரசு நாடுகளிடமும் பலமுறை முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை. இந்நிலையில் காஷ்மீர் […]
குடியுரிமை சட்ட விவகாரம் ஆளுநருக்கு முதல்வர் பதிலடி. இந்திய அரசியல் சாசனத்தை ஆளுநர் படிக்க வேண்டும் என அறிவுரை. குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறக் கோரி கேரள மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானம் பயனில்லாதது என அந்த மாநில ஆளுநர் தனது எதிர்ப்பை பதிவு செய்து இருந்தார். மேலும் குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையும் விமர்சித்த ஆளுநர், நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் கிடையாது என்று கூறி இருந்தார். இந்நிலையில் கேரள மாநிலம் […]
இந்திய பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச்சட்டம், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களுடன் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டி வந்தனர். இந்த சட்டத்திற்க்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம். இந்த போராட்டங்களால் நாட்டில் அமைதியின்மையும் ஏற்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பஞ்சாப் மாநிலத்திலும் நடைபெற்று வந்தது.ஆனால் அந்த போராட்டங்கள்அமைதியாக நடைபெற்றது இந்நிலையில், மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப் மாநில சட்டசபையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தில், […]
நிர்பயா வழக்கில் டெல்லி நீதிமன்றம் பிறப்பித்த தூக்கு உறுதி. கருணை மனுவை நிராகரித்தார் குடியரசு தலைவர். கடந்த 2012 ம் ஆண்டு தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதால் 2 ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மற்றொரு குற்றவாளியான ராமன் சிங் என்பவன் தில்லி திகார் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். ஏனைய 4 […]