அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் மூலமாக இந்திய மருத்துவ கவுன்சில் கோரிக்கை ஒன்றை வலிவுறுத்தி உள்ளது.அக்கடிதத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை மருத்துவ படிப்புகளுக்கு முறையாக வழங்க வேண்டும் என கூறி உள்ளனர். மேலும் 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், ஏற்கனவே இருப்பதில் 25% கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கவும் இந்திய மருத்துவ கவுன்சில் வலிவுறுத்தி உள்ளது.