மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் . முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நெஞ்சுவலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். தற்போது மன்மோகன் சிங் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவர் அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண தனி அறைக்கு மாற்றப்பட்டார். இவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பாதிப்பு இல்லை என்ற கூறியுள்ளனர்.