இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மேலும் ஒரு கப்பல் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த எம்.வி கெம் புளூட்டோ கப்பல் மீது நேற்று அரபிக்கடலில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த டிரோன் தாக்குதல் பரபரப்பு அடங்குவதற்குள் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றி வந்த மற்றொரு கப்பல் மீது செங்கடலில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. செங்கடல் வழியாக வந்த காபான் நாட்டைச் சேர்ந்த சாய்பாபா என்ற கப்பல் இந்திய தேசிய கொடியுடன் […]