Tag: india-china

இன்று இந்தியா – சீனா இடையே 9-வது சுற்று காம்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை!

இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சீன ராணுவம், லடாக் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவித்திருக்கிறது. இதன்காரணமாக எல்லைப் […]

9th round 3 Min Read
Default Image

இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினை…8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்பு இல்லாத அளவிற்கு பேச்சு வார்த்தை நடத்துவதில் தீவிரமடைந்துள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளின் இராணுவ படைகளை எல்லையில் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், படைகளை குறைக்கவும், பதற்றத்தை தணிக்கவும், ராணுவ தளபதிகிடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இதுவரை 7 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும், எந்தவிதா முன்னேற்றம் நடந்த மாதிரி தெரியவில்லை. இதை தொடர்ந்து , 8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை கிழக்கு லடாக்கில் […]

india-china 3 Min Read
Default Image

நாளை இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

நாளை (அக்டோபர் 12-ஆம் தேதி )இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா […]

india-china 2 Min Read
Default Image

சீனா இந்தியாவிற்கு அச்சுறுத்தல் தர விரும்பவில்லை.! சீனா அமைதியை விரும்புகிறது.! – சீன தூதர் பேச்சு.!

சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை. – சீன தூதர் சன் வீடோங். டெல்லியில் செயல்பட்டுவரும் சீன கல்வி நிறுவனமானது (Institute of Chinese Studies (ICS) Delhi), ஆனது இந்தியா-சீனா உறவுகள் குறித்து ஒரு கருத்தரங்கினை ஏற்பாடு செய்திருந்தது. இதில் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் சன் வீடோங் இந்தியா சீன உறவு குறித்த பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில், ‘ இந்தியா-சீனா உறவுகளை முன்னோக்கி […]

india-china 4 Min Read
Default Image

எல்லை விவகாரம்: லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது!

எல்லை விவகாரம் குறித்து இந்தியா-சீன ராணுவ முத்த கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்தில்  […]

army 3 Min Read
Default Image

லடாக் எல்லை விவகாரம்.. இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை!

லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த மாதம் 15-ம் தேதி இந்தியா-சீனா இடையே மோதல் ஏற்பட்டது. அதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும், சீனா தரப்பில் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியானது. இதன்காரணமாக, இரு நாட்டு ராணுவத்திற்கிடையே பதற்றம் ஏற்பட்டது. இதனை தணிக்கும் விதமாக, இரு நாட்டு ராணுவப்படை கமாண்டர்கள் மட்டத்திலும், இரு […]

army 3 Min Read
Default Image

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய இந்தியா-சீன ராணுவம்!

லடாக், கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இந்திய, சீன ராணுவ படைகள், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியது.  இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ஆம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம்அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர், ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, இருநாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு இடையில் பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இதற்கிடையில், சீனாவின் […]

india-china 3 Min Read
Default Image

திரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.! யாரு ஹீரோ தெரியுமா.?

லடாக், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்குள் நடந்த சண்டையை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக பாலிவுட் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார். இந்திய – சீன எல்லைகளில் ஒன்றான லடாக் பகுதிகளில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, இரு நாட்டு ராணுவவீரர்களுக்கும் சண்டை எழுந்தது. இந்த சண்டையில் ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை. இருந்தாலும், இதில், படுகாயமுற்று இந்திய வீரர்கள் […]

#China 3 Min Read
Default Image

சீன எல்லையில் கண்காணிக்கும் இந்தியாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.!

இந்திய- சீன எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நம்நாட்டு ராணுவத்தை சேர்ந்த நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான, லடாக் பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலுக்கு பிறகு, லடாக் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், இரு நாடுகளும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து, அண்மையில் பிரதமர் மோடி, லடாக் எல்லை பகுதிக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து, கலந்துரையாடிவிட்டு வந்தார். இதனால், […]

#China 3 Min Read
Default Image

1962ஆம் ஆண்டுக்கு பின் சீனாவின் வசமான 45,000 ச.கிமீ இந்திய நில பரப்பு.! சரத்பவார் பகீர் குற்றசாட்டு.!

1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பானது சீனாவின் வசமானது. – தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குற்றசாட்டு. இந்திய-சீன எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் பகுதியில் ஜூன் 15 ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கும் நடைபெற்ற மோதலில் இந்திய வீரர்கள் இருபது பேர் வீரமரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து இந்திய-சீன எல்லை விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கஆரம்பித்தது. இந்திய நாட்டின் […]

#China 6 Min Read
Default Image

15 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே

மத்திய மந்திரி ராம்தாஸ் அதாவாலே பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் . இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைப்பகுதியில் திங்கட்கிழமை  இரவு இரு தரப்புக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் ஒரு கர்னல் உட்பட இருபது இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர் .இதனால் சீனாவுக்கு எதிராக குரல் எழுந்துள்ளது .பலர் சீன பொருட்கள் ,உணவுகளை புறக்கணிக்குமாறு சமூக வலைத்தளம் முதல் வீதி வரை பல போராட்டங்களை […]

ban tiktok 4 Min Read
Default Image

சீன அதிபர் என நினைத்து வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்த பாஜகவினர்

சீன அதிபரின் உருவபொம்மையை எரிப்பதற்கு பதிலாக வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்துள்ளனர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜகவினர். கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அதன்படி, இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தததாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீன பொருட்கள் எதையும் பயன்படுத்தப்போவதில்லை என சமூகவலைதளங்களில் பலவிதமான கருத்துகள் விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், சீனா மீதுள்ள கோபத்தினால் சீன அதிபர் சீ ஜின்பிங்கின் உருவ பொம்மை என நினைத்து […]

india-china 3 Min Read
Default Image

சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியல் வெளியீடு.!

இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின்பெயர் விவரம் வெளியாகியுள்ளது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ஒரு ராணுவ அதிகாரியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. அதன் பின் நேற்று இரவு வெளியாக தகவலின் […]

army 3 Min Read
Default Image

லடாக் தாக்குதல்.! மேலும், 17 ராணுவ வீரர்கள் படுகாயம்.! 20 வீரர்கள் பலி.!

இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும், 17 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ […]

#China 3 Min Read
Default Image

இந்தியா – சீனா மோதல்.! 3 இந்திய வீரர்கள், 5 சீன வீரர்கள் உயிரிழப்பு.!

கடந்த பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 6-ம் தேதி சீன எல்லையில் இரு நாட்டினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு இரு நாட்டு படைகளும் பின்வாங்கின. இந்நிலையில்,  எல்லையில் பதற்றம் தணிந்து அமைதி நிலவுவதாக தெரிவித்த நிலையில், லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று இரவு இந்தியா, சீனா ராணுவம் இடையே நடந்த மோதலில் இந்தியா தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி மற்றும்  2 ராணுவ வீரர்கள் என 3 பேர் […]

india-china 2 Min Read
Default Image

இந்தியா – சீனா மோதல், பேச்சுவார்த்தை, தாக்குதல் என்ன நடக்கிறது ?

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்தனர். இந்தியா – சீனா மோதல்கள்: லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குட்பட்ட  பகுதியில் இந்திய ராணுவத்தினர் சாலை பணிகளை மேற்கொண்டனர். அதற்க்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனால், கடந்த மே மாதம் பாங்கோ லேக் பகுதியில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதில் இரு தரப்பினரும் காயமடைந்தனர். […]

GalwanValley 7 Min Read
Default Image

இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ நடவடிக்கை – சீன அரசு

இந்திய-சீன எல்லையில் அமைதி திரும்ப இரு நாடுகளும் நடவடிக்கை. இந்தியா மற்றும் சீன எல்லையில் அமைதி நிலை ஏற்பட இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ராணுவ தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றது என தற்போது சீன அரசு தகவல் அளித்துள்ளது. எல்லையில் அமைதியை நிலையை கொண்டு வர இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த […]

china army 3 Min Read
Default Image

லடாக் எல்லை விவகாரம்.. கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்!

இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து  சீன ராணுவம் பின்வாங்கியது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது. அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இன்று இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை […]

China retreated 2 Min Read
Default Image

எல்லை விவகாரத்தில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பக்கூடாது.. பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து ஆதாரமற்ற எந்தொரு தகவலையும் ஊடங்கள் வெளியிடக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தற்பொழுது தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள், சீனா எல்லைக்கு உட்பட்ட “மால்டோ” என்ற இடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சுமார் […]

india-china 5 Min Read
Default Image

இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை முடிவு.. சீன ராணுவம் பின்வாங்கும் என தகவல்!

லடாக் எல்லை பிரச்சனை பற்றி தற்பொழுது இந்தியா-சீனா அதிகாரிகள் இடையே “மால்டோ” என்ற இடத்தில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்கிய நிலையில், தற்பொழுது முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை தற்பொழுது தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தையில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ உயர் அதிகாரிகள், “மால்டோ” என்ற இடத்தில் […]

india-china 3 Min Read
Default Image