டெல்லி:பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக குழு அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்ட இருந்தார்.இந்த நிகழ்ச்சிக்காக கடந்த ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி,விமான நிலையத்திலிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் செல்ல இருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு சாலை மார்க்கமாக பிரதமர் சென்றார். […]