எவ்வித பாகுபாடும் இன்றி தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்வதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், சுதந்திர தின விழாவில் சென்னை தலைமைச் செயலகம் முதற்கொண்டு கிராம ஊராட்சிகள் வரை அனைத்து தலைமை அலுவலக வளாகத்தில் மக்களால் […]
2022ம் ஆண்டிற்கான நல்லாளுமை விருது அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு. நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி 2022-ஆம் ஆண்டுக்கான நல்லாளுமை விருதுகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டுக்கான ‘நல் ஆளுமை’ விருதுக்கு தேர்வானவர்களின் விபரங்கள் இதோ. செங்கல் சூளையில் பணிபுரிந்தவர்களை மீட்டு,வாழ்க்கை தரத்தை உயர்த்திய திருவள்ளூர் ஆட்சியருக்கு விருது. நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகளை மேற்கொண்ட திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு விருது. திருநங்கைகளின் வாழ்கை மாற்றத்திற்காக முன்முயற்சி எடுத்த […]
நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் 75வது சுந்தந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் தீவிரமாக அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும், […]
சுதந்திரத்திற்குப் பிறகு 1947 ஆம் ஆண்டு முதல் நம் நாட்டில் ஏற்பட்ட உள் எல்லைகள் மாற்றத்தால், இந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வரைபடத்தில் பல மாறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 2019 இல் ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இரண்டு புதிய யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. மேலும் பல பகுதிகள் இன்னும் தங்களது முழு மாநில அந்தஸ்தை விரும்புகின்றன. 1947 – 1949 1961ல் கோவா, 1962ல் பாண்டிச்சேரி, 1975ல் சிக்கிம் ஆகிய மாநிலங்கள் இந்திய யூனியனுடன் […]
சுதந்திர தினத்தன்று ஆளுநரின் ‘அட் ஹோம்’ நிகழ்ச்சிக்கு 25-50 சாதனையாளர்களுக்கு அழைப்பு -எம்ஹெச்ஏ சுதந்திர தினத்தன்று கவர்னர்கள் மற்றும் லெப்டினன்ட் கவர்னர்கள் நடத்தும் ‘அட் ஹோம்’ நிகழ்ச்சிக்கு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்கள், முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் விதிவிலக்கான கல்வியாளர்கள் உட்பட 25-50 சாதனையாளர்களை அழைக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. ‘அட் ஹோம்’ நிகழ்ச்சியில் இசைக்க அழைத்து வரப்படும் இசைக்குழுவுக்கு திரைப்படங்களின் பாடல்கள் மட்டுமின்றி தேசபக்தி பாடல்களை இசைக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. மேலும் பள்ளி […]
நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள், அறிவியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய விஞ்ஞானிகள். நோபல் பரிசு: நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும், பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும், சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது […]
75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், 75-வது சுதந்திர தினவிழா முன்னிட்டு, உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி,75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக #harghartiranga ஹேஷ்டேகில் பதிவுகள் இட வேண்டும் மாணவர்கள், பேராசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கிட நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களுக்கு […]
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவரான நல்லகண்ணு தேர்வு. தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகைசால் தமிழர் விருது சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது. அதன்படி, சுதந்திர தின விழாவில் ஆர்.நல்லக்கண்ணுக்கு விருது வழங்கி முதலமைச்சர் முக ஸ்டாலின் கவுரவிக்க உள்ளார். தமிழ்நாட்டுக்கும், தமிழ் இனத்தின் வளர்ச்சிக்கும் படுபட்டவர்களை கவுரவிக்கும் வகையில் தகைசால் தமிழர் விருது […]
நினைவு சின்னங்கள், முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி என மத்திய அரசு அறிவிப்பு. நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5-15ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி என்றும் கூறியுள்ளது. அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என […]
சுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தகவல். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.