டெல்லியின் ஆட்சி ஒரு முன்மாதிரியாக உருவெடுத்துள்ளது என்று அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சுதந்திர தின விழாவில் தெரிவித்துள்ளார். டெல்லி தலைமை செயலகத்தில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தேசிய கோடியை ஏற்றிப்பின் பேசிய அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது மக்களுக்கு சேவை செய்யும் போது உயிர் இழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கிற்கு […]
சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து. நாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தையொட்டி கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேநீர் விருந்து அளித்துள்ளார். இந்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பிக்கள், எம்ஏக்கள் பங்கேற்றுள்ளனர். மேலும், பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், மாவோஸ்யிடுகள் ஒட்டிய சுவரொட்டியால் கேரள மாநிலம் வயநாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு அமைந்துள்ளது. அங்கு கம்பமலை தேயிலை தோட்டத்திற்கு வந்த 4 மாவோயிஸ்டுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். இதனிடையே, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு […]
உச்சநீதிமன்றத்தில் நடந்த 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பேசியபோது தலைமை நீதிபதி என்.வி.ரமணா வருத்தம். இந்தியாவின் 75வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் உச்சநீதிமன்றத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த பின் பேசிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும் போது போதுமான விவாதங்கள் இல்லாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்தார். அதாவது, நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றும்போது போதுமான விவாதங்களை இல்லாதது வருத்தம் […]
கொரோனா சூழலால் சுதந்திர தின நிகழ்ச்சிகளைக் காண பொதுமக்கள் நேரில் வர வேண்டாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியச் சுதந்திர தின திருநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தலைமைச் செயலக கோட்டைக் கொத்தளத்தில் தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆகஸ்ட் திங்கள் 15-ஆம் தேதி காலை 09.00 மணிக்கு தேசியக் கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகளும், பொது மக்களும், […]
குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதுகள் 152 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை மேற்கொண்டதற்கான 152 காவலர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் எட்டு பேர் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, காவல் ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், சிதம்பர முருகேசன், கண்மணி ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி 75-வது சுதந்திர தினம் விழா நாடு முழுவதும் கொண்டாடபட உள்ள நிலையில், அந்நாளை முன்னிட்டு, மக்கும் தன்மையற்ற பொருளால் ஆன மூவர்ணக் கொடியை அகற்றுவது நடைமுறைச் சிக்கலாக இருப்பதால், மக்கள் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேசியக் […]