டெல்லி : இந்தியாவில் 2036ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, செங்கோட்டையில் பிரதமர் மோடி தனது உரையில், ” 75,000 புதிய மருத்துவ படிப்பு, ஒரே நாடு ஒரே தேர்தல் செக்யூலர் சிபில் கோட், பங்களாதேஷ் இந்துக்கள் பாதுகாப்பு என பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்கள் மத்தியில் உரையாற்றினார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு பிரதமர் மோடியின் முதல் […]
சென்னை : நாட்டில் பிரிவினைவாதத்தை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நிகழ்ந்த தேசப் பிரிவினை மற்றும் அப்போது நேர்ந்த கொடூரங்கள் பற்றி நினைவுகூரப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் […]
டெல்லி : நாட்டில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் வேதனை தருகிறது என்று பிரதமர் மோடி சுதந்திர தின விழாவில் கூறி உள்ளார். கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதியன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்கம் மட்டுமல்லாது பல்வேறு இடங்களில் பெரும் போராட்டங்கள் நடந்த வரும் நிலையில், இன்று பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்த […]
சென்னை : தமிழக மலைப்பகுதிகளில் இடர்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று மேப்பாடி, சூரல் மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு, அண்டை மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன. ஒரே நாளில் பெய்த அதிகப்படியான கனமழை, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு என கேரள […]
டெல்லி : செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், 10 ஆண்டுகளுக்கு பிறகு பங்கேற்ற முதல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பெற்றுள்ளார். 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக இந்திய தேசியக்கொடியை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பில் உள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். கேபினட் அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சி […]
சென்னை : இன்று 78வது சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள், பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். இன்று 78வது சுதந்திர தினவிழா நாடெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை, கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பல்வேறு துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார். அவ்வாறு இன்று முதலமைச்சரிடம் இருந்து விருது வாங்கியவர்களின் பட்டியலை கீழே காண்போம். “தகைசால் தமிழர் விருது” காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. “டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் […]
டெல்லி : 78வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் 11வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிய பின், நாட்டு மக்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். டெல்லி செங்கோட்டையில் தொடர்ந்து 11வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றினார. நாட்டின் 78ஆவது சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தியதை, தொடர்ந்து பிரதமர் மோடி செங்கோட்டையை சென்றடைந்தார். அங்கு, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, நமது நாட்டின் […]
சென்னை : சுதந்திர தினவிழா நிகழ்வில், “முதல்வர் மருந்தகம்”,” முதல்வரின் காக்கும் கரங்கள்” ஆகிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் மத்தியில் அறிமுகம் செய்து அது பற்றிய கடனுதவி, மானிய விவரங்களை விரிவாக கூறினார். இன்று நாடு முழுவதும் 78வது சுதந்திர தினவிழா நிகழ்வுகள் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தலைநகர் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார். பின்னர், நல்லாளுமை விருதுகள், கல்பனா சாவ்லா விருது, தகைசால் விருது, முதலமைச்சரின் இளைஞர் விருதுகள் உள்ளிட்ட விருது பாட்டில்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் விருதுகள் வழங்கி […]
சென்னை : சுதந்திர தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்வை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், திமுகவின் நிலைபாடு என்ன என்பது கேள்விக் குறியாக உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 78-வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் சுதந்திர தின விழா சென்னை ஜார்ஜ் கோட்டையில் வைத்து நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் […]