மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வர் பழனிசாமி விருது வழங்கினார். சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்காக விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது தரப்பட்டது. அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது முதல்வர் வழங்கினார். […]
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருடந்தோறும் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். அந்தவகையில் இந்த வருடம் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக ரயில் சேவை, பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும், ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ரயில்களில் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் நேற்று வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், […]