சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை பிரசித்திபெற்றதாகும். சபரிமலையில் இந்த ஆண்டில் 27 நாட்களில் ரூ.100 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளில் இருந்தே சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. தற்போது சபரிமலையில் மழை பெய்து வருகிறது. ஆனாலும் மழையையும் பொருட்படுத்தாமல் இருமுடி கட்டு சுமந்த பக்தர்கள் சரண கோஷம் […]