தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் மதுபான விற்பனை மூலம் ரூ.28,839 கோடி வருவாய் வந்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மதுவிலக்கு கொள்கை விளக்கக் குறிப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், 2019-20 நிதியாண்டில் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பீர் ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலம் 3 கோடியே 39 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றம் இல்லை எனவும் உச்சநீதிமன்றம் கூறியதால் தான் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாகவும் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், 89 கோடியே 7 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 82 லட்சத்து 38 ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், 7 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் தலை முடி காணிக்கை செலுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சபரி மலையில் கோவில் நடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. மேலும் மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் கடந்த 15-ம் தேதியும் நடைபெற்றது. இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தில், கோவிலில் ரூ.263.57 கோடி வருமானம் வந்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. சபரி மலைக்கு வருடந்தோறும் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து, மலைக்கு சென்றுவருவார்கள். அப்போது, அவர்களது வேண்டுதலுக்கு […]
2020 புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை ரூ.315 கோடியை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் இந்தாண்டு பீரை விட மதுபானங்கள் தான் அதிகளவு விற்பனையாகி, கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகம் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. தீபாவளி, பொங்கல் மற்றும் புத்தாண்டு பண்டிகை காலங்களில் குடிமகன்களின் கூட்டம் எங்கு அலைமோதிகிறதோ இல்லையோ, ஆனால் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் குவிந்து கிடக்கும். இதனால் அங்கு வழக்கத்தை விட மதுவிற்பனை அதிகமாக இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் […]
forbes நிறுவனமானது ஒவ்வொரு ஆண்டும் அதிக பிரபலமானவர்கள் மற்றும் சாதித்தவர்கள்,சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் 8 வயது சிறுவன் முதலிடம் பெற்றுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் கடைசியில் அந்த ஆண்டில் அதிகம பிரபலமானவர்கள் மேலும் சாதித்தவர்கள் மற்றும் சம்பாதித்தவர்கள் என்று நிறைய பட்டியல்களை forbes நிறுவனமானது வெளியிட்டு வருவது வழக்கம் அந்த வகையில் தற்போது 2019ம் ஆண்டிற்கான பட்டியல் வெளியாகி உள்ளது. அதைபோல் யூட்யூப் மூலம் சம்பாதிப்பவர்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது. […]
வருமான வரி செலுத்தாதவர்கள் 21 நாட்களுக்குள் வரியை செலுத்த வேண்டுமென்று வருமானவரி துறை தெரிவித்துள்ளது. வருமான வரித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் விரைவாக வருமானவரியை தாக்கல் செய்ய வேண்டும்.அப்படி முறையாக தாக்கல் செய்யாதவர்கள் 21 நாட்கள் கழித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டுமென்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 21 நாட்களில் வருமான வரியை செலுத்ததற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர்கள் மேஈது வருமான வரி சட்டம் (1961)_ன் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை […]
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜூன் வரை விளையாட்டு மற்றும் விளம்பரங்கள் மூலம் தடகள வீராங்கனைகள் பெற்ற வருமானத்தை கணக்கிட்டு தயாரித்த பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் அதிகம் சம்பாதிக்கும் உலக தடகள வீராங்கனைகள் பட்டியலில் இந்தியாவின் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஏழாவது இடம் பிடித்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. முதல் 3 இடத்தை பிடித்த டென்னிஸ் விரங்கனைகள் அமெரிக்கவின் : செரீனா வில்லியம்ஸ் 126 கோடி ரூபாய் வருமானத்துடன் […]