கொரோனா தடுப்பு பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகையும், 2 மாத ஊதிய நிலுவை தொகையும் வழங்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல். இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்திருந்தும், கொரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருபவர்கள் மருத்துவர்கள் என்பதையும், கொரோனா இரண்டாவது அலை சமயத்தில் அம்மா மினி கிளினிக்குகளில் தற்காலிகமாக பணியாற்றிய மருத்துவர்கள் ஓர் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி […]
சென்னை:2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.150.89 கோடியை முதல்வர் வழங்கியுள்ளார். சர்க்கரை ஆலைகளுக்கு 2020-2021 ஆம் ஆண்டு அரவை பருவத்திற்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ரூ.150.89 கோடி உற்பத்தி மற்றும் சிறப்பு ஊக்கத்தொகையை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து,காணொலி வாயிலாக வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு திட்டங்களையும் முதல்வர் அவர்கள் தொடங்கி வைத்துள்ளார்.அதன்படி,வேளாண்மைப் […]
அர்ச்சகர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார். அர்ச்சகர்கள், பட்டாச்சியார்கள், பூசாரிகளுக்கு அரசின் சார்பில் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை சென்னை திருவான்மியூரில் முதல்வர் ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார். அதன்பின்னர்,முதல்வர் பேசியதாவது: “மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு மரியாதை செய்ய அவரது சிலைக்கு வணக்கம் செலுத்த நான் சென்றாக வேண்டும்.எனவே,எனது உரையை சுருக்கமாக கூறுகிறேன். நமது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள்,இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு எப்படி பணியாற்றுகிறார் என்று […]
ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாத காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காலத்தில் பணியாற்றி வரும் மருத்துவ பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். அந்தவகையில், ஏப்ரல், மே, ஜூன் மாத காலத்திற்கு மருத்துவர்களுக்கு ரூ.30,000, செவிலியர்களுக்கு ரூ.20,000, இதர பணியாளர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா சிகிச்சை பணியின்போது உயிரிழந்த 43 மருத்துவர்களின் குடும்பங்களுக்கு […]
உத்தரகாண்டில், சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் சாதிமறுப்புத் திருமணம் செய்வதால், பலர் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆளும் பாஜக அரசு திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிற நிலையில், உத்தரகாண்ட் அரசு இப்படி ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]