கீழே விழுந்து கையில் ஏற்பட்ட காயத்திற்கு கோவை முத்தூஸ் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனுப்பர்பாளையம் கோவில் வீதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் – திவ்யபாரதி தம்பதிகளின் மூன்றரை வயது மகள் தான் பிரியதர்ஷினி. கடந்த வாரம் வீட்டில் இருந்து கழிவறைக்கு செல்லும் படியில் ஏறும்போது பிரியதர்ஷன் தடுமாறிக் கீழே விழுந்ததில் அவரது இடது கை மட்டும் முட்டியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது கை வீங்கி காணப்பட்டுள்ளது. […]