அடுத்த விசாரணை வரை சவுக்கு சங்கர் எவ்வித கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் நிபந்தனை. கடந்த ஜூலை 22-ம் தேதி, ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்திருக்கிறது என்று ஒரு யூடியூப் சேனலில் சவுக்கு சங்கர் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து சவுக்கு சங்கர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவுசெய்து சவுக்கு சங்கருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. நீதித்துறை பற்றி அவதூறாக பேசியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு […]
கேரளாவின் பாலக்காடு மாவட்டம் கரிம்பா கிராமத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு தனது அண்டை வீட்டாரான 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 90 வயது முதியவருக்கு விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து 50,000 ரூபாய் அபராதமும் விதித்தார். இந்த உத்தரவை உறுதி செய்த சிறப்பு அரசு வக்கீல் நிஷா விஜயகுமார், குழந்தைகளை […]
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு 8 வயது சிறுமியை கடத்தி சென்று முத்தம் தந்த இளைஞருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. பைக்கில் கடத்தி சென்று சிறுமிக்கு முத்தம் தந்த மாரிமுத்து என்ற இளைஞருக்கு ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதம் கட்ட தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் அரியலூர் மகிளா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெயா. இவருக்கு வயது (45). கடந்த 2019 -ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த சுரேந்தர் (20) ஜெயாவை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து ஜெயா அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுரேந்தரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை […]
‘கட்டாய மதமாற்றத்துக்கு’ 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதா கர்நாடகாவில் வருகின்ற டிச.20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் பட்டியலினத்தவர்கள்(எஸ்சி, எஸ்டி) மற்றும் ஏழை எளிய மக்கள் அதிக அளவில் மதமாற்றம் செய்யப்படுவதாக தொடர்ந்து புகார் எழுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,கர்நாடகாவில் மதமாற்ற தடை சட்ட மசோதா அமைச்சரவை ஒப்புதல் பெற்று வருகின்ற டிச.20 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,கர்நாடகாவில் மத மாற்றத்தைத் […]
2011ம் ஆண்டு கட்டிட அனுமதிக்காக ரூ.2000 லஞ்சம் வாங்கிய சென்னை மாநகராட்சி உதவி பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு. இதுகுறித்த செய்தி குறிப்பில், இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை சம்மந்தப்பட்ட ஊழல் வழக்கில் குற்றவாளி சென்னை மாநகராட்சி உதவி பொறியாளர் சங்கரன் என்பர் லஞ்சம் கேட்ட குற்றத்திற்கு ஒரு வருடம் சிறை தன்டைனையும், லஞ்சத்தை பெற்றதற்கு 2 வருடங்கள் என மொத்தம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் […]
விழுப்புரத்தில் பலாத்காரம் செய்து 2 பெண்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் தெருநாவலூர் காவல் நிலையத்திற்குட்பட்ட கொத்தனூர் எனும் கிராமத்தில் 39 வயதுடைய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போது பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்துள்ளனர், ஆனால் கிடைக்கவில்லை. இது போல 2014 ஆம் ஆண்டில் […]
2009-ம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. தேசதுரோக வழக்கிற்காக வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ,ரூ 10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விட்டது. இதனால் வைகோ தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இதில் தனக்கு கொடுத்த ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் , […]