நயன்தாரா வழியில் களமிறங்கும் பிரபல நடிகை!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை நயன்தாரா அதிகமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடித்து வருகிறார். இவரது பாணியில் நடிகை தமன்னாவும் களமிறங்கியுள்ளார். இந்நிலையில், நடிகை தமன்னா நடிப்பில், கண்ணே கலைமானே, தேவி 2 போன்ற படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ரோகினி வெங்கடேசன் இயக்கும், ஒரு திகிலான நகைசுவை கதையின் நாயகியாக, நடிகை தமன்னா நடிக்கிறார். இப்படத்தில் மேலும் பல பிரபலங்கள் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.