தமிழக அரசு ₹25.213 கோடி நிலுவையில் உள்ள 26 தொழில் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் அனுமதியால் சுமார் 49,033 புதிய வேலைவாய்ப்புகள் விரைந்து உருவாக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிபேட்டை, திருப்பூ, நாமக்கல்,கோவை, பெரம்பலூர்,கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களில் இத்திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு மசோதா மக்களவையிலும் , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து. இந்நிலையில் மத்திய அரசு 10 சதவீத இடஒதுக்கீடை அமுல்படுத்தும் முயற்சியில் இறங்கி வருகின்றது. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை வருகின்ற 1ஆம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகத்திலும் அமுல்படுத்த வேண்டுமென மத்திய அரசு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது. இது குறித்து மத்திய அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த […]