ராமநாதபுரம் : 1924ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே செல்லூர் கிராமத்தில் பிறந்தவர் இம்மானுவேல் சேகரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய இவர், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். கடந்த 1957, செப்டம்பர் 11இல் படுகொலை செய்யப்பட்டார். அவர் இறந்த நாளான செப்டம்பர் 11ஆம் தேதியன்று ஆண்டுதோறும் இம்மானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடியில் அமைக்கப்பட்டுள்ள இம்மானுவேல் சேகரன் நினைவிடத்திற்கு இன்று அரசியல் தலைவர்கள் நேரில் வந்து மரியாதை செலுத்துகின்றனர். இம்மானுவேல் சேகரனார் நினைவுதினம் […]
தமிழக ஆளுநராக என்.ஆர்.ரவி நியமிக்கப்பட்டியிருப்பதை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல். சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு திருமாவளவன், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மானுவேல் சேகரன் சமூக நீதிக்காக போராடியவர் என்றும் அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். இதனைத்தொடர்ந்து பேசிய திருமாவளவன் எம்பி, தமிழகத்தில் […]