சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதோரா மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு. உடல்நலக்குறைவால் நேற்று விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் இன்று ராபர்ட் வதோரா அமுலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். […]