திருச்சி விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் பறிமுதல்..!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி நகருக்கு வந்த விமானத்தில் சட்டத்திற்கு புறம்பான முறையில் கடத்திவரப்பட்ட சுமார் ரூபாய் 4.21 லட்சம் மதிப்பிலான 147 கிராம் தங்கம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று காலை பறிமுதல் செய்யப்பட்டது… இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பக்ருதீன் என்பவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்…

கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் பறிமுதல்…!

கோலாலம்பூரிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்டதாக ரூ.16 லட்சம் மதிப்புள்ள 360 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சென்னையைச் சேர்ந்த இப்ராஹிம் ஷா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர் விமான நிலைய அதிகாரிகள்.