கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதுகாப்புப் படை (BSF ) வீரர்கள் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்தியாவில் மட்டும் மொத்தமாக 5,28,859 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர், மேலும் 16,095 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் காவல்துறையினர் மட்டுமின்றி பாதுகாப்புப் படை (BSF ) வீரர்களையும் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணி […]
உத்தரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடந்திருப்பதாகவும், அது என்னவென்று தற்போதைக்கு கூற முடியாது என்றும் தெரிவித்தார். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை நாட்டு மக்கள் பார்க்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ராஜ்நாத்சிங்கின் இந்த பேச்சு, பாகிஸ்தானுக்கு எதிராக இரண்டாவது ‘சர்ஜிகல் ஸ்டைரக் ‘ நடத்தப்பட்டது என்பதை சூசகமாக தெரிவிக்கும் வகையில் உள்ளது. DINASUVADU
ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் கோகர்நாக் நகரை அடுத்த லர்னூ என்ற கிராமம் வழியாக ஊடுருவ முயன்ற சில தீவிரவாதிகளை ராணுவத்தினர் தடுத்து நிறுத்த முயன்ற போது இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இந்த துப்பாக்கிச் சண்டையில் இதுவரை 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் மேலும் தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதாகவும், ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. source: dinasuvadu.com
காஷ்மீர் மாநிலம் குப்வாராவில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர்கள் 5 பேர் உயிரிழந்ததுடன், இருவர் பனிக்குள் சிக்கியுள்ளனர். குப்வாரா மாவட்டம் டாங்தர் பகுதியில் நேற்று பிற்பகலில் ராணுவ வீரர்கள், எல்லைப் பகுதிகளில் சாலை அமைக்கும் பொறியாளர் என 9 பேர், வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பனிச்சரிவு ஏற்பட்டு வாகனம் முழுவதையும் மூடியது. உடனடியாக அங்கு விரைந்த மீட்புக் குழுவினர், பனிச்சரிவுக்குள் சிக்கி இருந்த 2 பேரை உயிருடன் மீட்டனர். ஆனால் துர்திருஷ்டவசமாக பனிச்சரிவில் […]
ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த 50 வயதான தலைமைக் காவலர் ஆர்.பி. ஹஸ்ரா என்பவர் பாகிஸ்தான் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி தரும் விதமாக பாகிஸ்தானைச் சேர்ந்த பாதுகாப்புப் படையினர் நிலைகளை குறி வைத்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று தாக்குதல் நடத்தினர். இதில் பாகிஸ்தான் படையினர் 12 முதல் 15 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ராமவ்தார், நேற்று […]