சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய தலைவர்களுடன் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொள்கிறார். கட்சித் தொடங்கிய பின், இதுபோன்ற விழாவில் விஜய் பங்கேற்பது இதுவே முதல்முறை. தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள விஜய், அதில் ஓராண்டை கடந்துவிட்ட நிலையில், மாவட்டம் மற்றும் வட்டம் உள்ளிட்ட உட்கட்சி நிர்வாகிகளை நியமித்து 2026 […]