மதுரையில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை மீட்பு. மதுரையில் ரிசர்வ் லைன் பகுதியில் இதயம் முதியோர் மற்றும் ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதனை சிவக்குமார் என்பவர் நடத்தி வரும் நிலையில், இங்கு 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக கூறி, மாணிக்கம் என்ற ஒரு வயது சிறுவனை அதிக விலைக்கு விற்றுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்ட […]