உலக அளவில் சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழுவினர் ஒரு தீர்வை கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களை செரிக்கும் என்சைம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் அளவிற்கு கடலில் கொட்டப்படும் பிளாஸ்டிக் குப்பைகளால் நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் மனிதர்கள் கடும் அச்சுறுத்தலை சந்தித்து வருவதாக ஆய்வுகளின் வாயிலாக தெரிய வந்துள்ளது. மறுசுழற்சி செய்வதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாடு பாதிப்பிலிருந்து மீள்வதற்கு உலகம் முழுவதும் தீவிர முயற்சிகள் […]