சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘வேட்டையன்’ படத்தை முடித்து விட்டு, ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படவேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதற்கிடையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் கடந்த 30- ந்தேதி அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நடந்த பரி சோதனையில் ரஜினிகாந்தின் இதயத்தில் இருந்துரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகாதமனியில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, வீக்கத்தை அறுவை சிகிச்சையின்றி […]
மும்பை:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் […]
தமிழகத்தில் கடந்த 2 வாரத்தில் ஐசியூவில் இருப்போர் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து காணப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில்,தமிழகம் முழுவதும், 23,888 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ள நிலையில்,29 பேர் உயிரிழந்ததாக நேற்று தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் 15,036 பேர் கொரோனாவிலிருந்து நலம் பெற்றுள்ள நிலையில், 1,61,171 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும்,சென்னையில் ஒரே நாளில் […]
கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநில முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் அவர்கள்,கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் செயல்படாமல் இருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார், பின்னர் தனது சொந்த ஊருக்குத் தளம் மாறினார்.தற்போது திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் அருண்குமார் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில்,அச்சுதானந்தன் அவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு […]
கேரளாவில் திருவனந்தபுரத்தில் கேரளா அரசுக்கு எதிரான இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சசிதரூர் அவர்கள், கேரளாவில் தொற்று அதிகரிப்பு குறித்து விமர்சித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இதனால், […]
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி மாரடைப்பு காரணமாக,ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முரளி ராமசாமி மாரடைப்பு காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளார். புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்த பிரபல இயக்குநர் ராம நாராயணனின் மகனான முரளி,தனது தந்தையின் மறைவிற்குப் பிறகு தேனாண்டாள் நிறுவனத்தின் மூலம் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றார். அந்த வரிசையில்,கடந்த 2017-ஆம் ஆண்டு முரளி தனது […]
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராஃபிக் ராமசாமி,சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே அங்கு வந்து போக்குவரத்தைச் சரி செய்வதை வழக்கமான பணியாகக் கொண்டிருந்தார்.இதனால்தான் ராமசாமிக்கு, டிராஃபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.பொதுமக்கள் நலன் கருதி,பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து,அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி பல நல்ல செயல்கள் செய்து வந்தார்.எனவே,இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.ராமசாமி அந்த அளவிற்கு சமூக […]
கொரோனா மரணங்களை விட அதிமுக அரசின் அலட்சிய மரணங்கள் அதிகரித்துவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று மின்தடை காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய்கார்த்திகேயன், அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியபோது மருத்துவ கல்லூரி கட்டுமானப் பணிகள் நடைபெற்றதால் 40 நிமிடம் அளவிற்கு மின் […]
கேரள தங்க கடத்தல் வழக்கு குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார். திருச்சூர் மாவட்டம் விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து, உடனடியாக அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஸ்வப்னா சுரேஸை ஐ.சி.யுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து […]
தமிழ் சினிமா தற்போது சோதனை காலத்தை கடந்து வருகிறது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக எந்த புதுப்படங்களும் வெளிவரவில்லை, அதுமட்டுமில்லாமல் திரைப்பட படப்பிடிப்புகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல மூத்த இயக்குனர் எஸ்.பி முத்துராமன் தற்போதைய தமிழ் சினிமாவின் நிலைமையை பற்றி கூறுகையில், தமிழ் திரைப்படத்துறை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. கிட்டத்தட்ட அவசர சிகிச்சை பிரிவில் இருந்து, உயிருக்கு போராடும் நிலையில் தான் உள்ளது. இன்னும் கொஞ்சம் விட்டால் மொத்த உயிரும் போய்விடும் போல. அதனால் இத்துறையை காப்பாற்ற மத்திய, […]