பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி ரசிகர் ஒருவரை இந்திய தேசியக் கொடியை சரியாகப் பிடிக்க வைத்து, இந்தியர்களின் மனங்களை வென்றுள்ளார். சுவிட்சர்லாந்தின் செயின்ட் மோர்டிஸ் நகரில் இந்திய வீரர் சேவாக்கின் டைமன்ட் லெவன் அணிக்கும், ஷாஹித் அப்ரிடியின் ராயல்ஸ் அணிக்கும் இடையிலான ஐஸ் கிரிக்கெட் போட்டி நடந்தது. பனி உறைந்த ஏரியில் இந்த கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் சேவாக், அப்ரிடி தவிர்த்து சோயிப் அக்தர், ஜாகீர்கான், கிரேம் ஸ்மித், ஆன்ட்ரூ சைமன்ட்ஸ், லசித் மலிங்கா, […]