ஐசிசி, 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட்டர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐசிசி ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளையாடும் கிரிக்கெட்டரை, கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு விதமான போட்டியிலும் விருது வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் சிறந்து விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதற்கான பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்திய வீரர்களில் டி-20யில் சூரியகுமார் யாதவ் மற்றும் மகளிர் பிரிவில் ஸ்ம்ரிதி மந்தனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். சர் கார்பீல்ட் […]