தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மூன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பால்வளம், பால் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனிமவளத்துறை மேலாண் இயக்குநராக சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி அருண்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.