சென்னை : தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்களை நியமனம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்துவதற்காகவும், அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு இயற்கை பேரிடர் காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மக்களுக்கு சென்றடைய செய்யவும் இந்த கண்காணிப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூர், திண்டுக்கல், சென்னை, திருவண்ணாமலை, […]
சென்னை : தமிழ்நாட்டில் மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பொறுப்பு புதியதாக உருவாக்கப்பட்டு, அந்த பொறுப்பிற்கு ஐஏஎஸ் அதிகாரி கார்த்திகா நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 10 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனை தொடர்ந்து, மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் நிர்வாக காரணங்களுக்காக […]
தமிழ்நாடு முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அவரது உத்தரவில், ‘நாராயண சர்மா செங்கல்பட்டு சார் ஆட்சியராகவும், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சார் ஆட்சியராக திவ்யான்சு நிகம் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம் மேட்டூர் சார் ஆட்சியராக பொன்மணி, பொள்ளாச்சி சார் ஆட்சியராக கேத்தரீன் சரண்யா, கிரிஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியராக பிரியங்கா, நாகப்பட்டினம் சார் ஆட்சியராக குணால் யாத, திருவள்ளூர் பொன்னேரி […]
16 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அபூர்வா, ஹிதேஸ்குமார் மக்வானா, அதுல்யா, எஸ்.ஜே.சிரு, ஆபிரகாம், சரவண வேல்ராஜ், ஜான் லூயிஸ், செல்வராஜ், லில்லி, நந்தகோபால், கிரண் குராலா, பழனிசாமி உள்ளிட்ட 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தலைமை செயலர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். விளையாட்டு துறை கூடுதல் செயலாளராக அதுல்ய மிஸ்ரா, வீட்டு வசதி துறை முதன்மைச் செயலாளராக அபூர்வா, பேரூராட்சிகள் இயக்குனராக கிரண் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களாக 40 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியினரும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில்,சென்னை மாநகராட்சி உட்பட […]
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் உத்தரவு. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்துக்கு பதவி உயர்வு அளித்து தலைமை செயலாளர் வெ.இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். 1991ம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 7 பேருக்கு தலைமைச் செயலாளர் அந்தஸ்திலான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல் துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், […]
கூடுதல் தலைமை செயலாளர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தமிழகத்தில் 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, வருவாய் நிர்வாக ஆணையராக இருந்த பனீந்திர ரெட்டி, வணிக வரித்துறை நிர்வாக ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுபோன்று தமிழக வருவாய் நிர்வாக ஆணையராக சித்திக் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பணியிலுள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை ஜனவரி 31-க்குள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பணியில் உள்ள ஐஏஎஸ் அதிகாரிகளின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் சொத்து விபரங்களை பதிவு செய்யவேண்டும் என தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், முறையான காரணமின்றி சொத்து விவரங்களை பதிவு செய்யாமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் […]
சென்னையில் மழை,வெள்ள மீட்பு பணிகளை கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள வீடுகள் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் தேங்கி காட்சியளிக்கிறது.கனமழை காரணமாக தண்ணீர் தேங்கி உள்ளதால் சென்னையில் ஈவிஆர் சாலை, சுங்குரெட்டி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. மேட்லி சுரங்க பாதை, கணேஷபுரம் சுரங்க பாதை உள்ளிட்ட 6 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில்,சென்னை கொளத்தூரில் மழை பாதிப்புகளை […]
வடகிழக்கு பருவமழை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது,வங்க கடலில் நவம்பர் 9 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் உருவாகவுள்ளது.இதனால்,வட கடலோர மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில்,வடகிழக்கு பருவ மழை தமிழகத்தில் தீவிரமடையத் தொடங்கி இருப்பது தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில்,தற்போது ஆலோசனைக் […]
தமிழகத்தில் 14 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம். தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனராக செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த கந்தசாமி, குறைதீர்ப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் நியமிக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக கிளாட்ஸ்டோன் புஷ்பரராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். சுற்றுசூழல் மற்றும் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை நல்ல மழை பொழிவைக் கொடுக்கும். அதேபோல் அந்த மழை பொழிவால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பொதுமக்களுக்கும் அரசுக்கும் மிகுந்த சிரமத்தை கொடுக்கும்.எனவே இதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தற்போது தமிழகஅரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை சென்னை […]
தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி, சட்டம் – ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் மற்றும் பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.