தமிழக அரசு, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் தற்போது தமிழக அரசு, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அவர்களை வெவ்வேறு துறைக்கு முக்கிய பொறுப்பில் அமர்த்தியுள்ள்ளது தமிழக அரசு. மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் தான் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஐ..ஏ.எஸ் […]
கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், இன்று (27.5.2021) தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்கள் தலைமையில், தலைமைச் செயலகத்தில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து கோயம்புத்தூர், ஈரோடு, மதுரை, திருப்பூர், சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி […]
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளராக நஷீமுதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக சுப்பிரமணியத்தை நியமனம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் மேலாண்மை இயக்குனராக இருந்த மோகன் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்த நிர்மல்ராஜ் புவியியல் மற்றும் […]
ஆந்திராவில் குழந்தை பிறந்த 22வது நாளில் கடமை தான் முக்கியம் என்று மீண்டும் பணிக்கு திரும்பிய ஐஏஎஸ் அதிகாரி. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாநகராட்சி ஆணையரான ஸ்ரீஜனா நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கடந்த மாதம் வரை பணியில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் குழந்தை பிறந்த 22வது நாளில் The baby is bornமீண்டும் பணிக்கு திரும்பினார். ஸ்ரீஜனா, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால், காலை முதல் இரவு வரை அலுவலகத்திலேயே இருந்து அதிகாரிகளுக்கு தகுந்த […]
கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தபட்டுள்ளது. இதனால் அத்தியாவசியமான தேவைகள் தவிர மற்ற நேரங்களில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மருந்து கடை, உணவகங்கள் (பார்சல் மட்டும் ) ஆகியவை வழக்கம்போல இயங்கலாம் எனவும், மளிகை கடைகள், காய்கறிக்கடைகள், பெட்ரோல் பல்க் ஆகியவை குறிப்பிட்ட நேரத்தில் இயங்கவும் அனுமதிக்கப்பட்டு நேற்று முதல் இயங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் முதல்வர் […]
தமிழக அரசின் தலைமை செயலாளர் கே.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிச்சாமி பேரூராட்சிகளின் இயக்குரனாக நியமிக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள எல்.சுப்பிரமணியன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.மேலும் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக கோவிந்த ராவும் , விருதுநகர் மாவட்ட ஆட்சியராக ஆர்.கண்ணணும் , விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக அண்ணாதுரை நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். தமிழ் இருக்கைக்காகத் தனி ஒரு நபர் அளித்த நிதியுதவில், இந்தியாவிலேயே இதுதான் அதிகப்படியானத் தொகை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்குவங்க அரசாங்கத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் பாலச்சந்திரன். இந்தியாவின் தகவல் தொடர்புத்துறையை அதிரவைத்த இஸ்ரோ ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்த ஊழலைப் பணியிலிருக்கும் போதே உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டிய முக்கிய அதிகாரி பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ். தற்போது தனது ஓய்வு ஊதியத் […]