சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழகத்தை உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்த கேள்வி இடம்பெற்றது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடப்பு ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடந்த முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று மத்திய அரசுப் பணியாளர்களுக்கான நெறிமுறைகள் குறித்த தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வில் பெண்கள் இயக்கம், நீர் மேலாண்மை குறித்த பல்வேறு வினாக்கள் கேட்கப்பட்டது. […]