கேரளா : வயநாடு தொகுதியில் நவம்பர் 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தலில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். எனவே, பிரச்சாரம் மும்மரமாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் கடைசி நாள் இன்று என்பதால் வயநாட்டில் அவரது சகோதரி பிரியங்கா காந்திக்காக ராகுல் காந்தியும் வருகை தந்து பிரச்சாரம் செய்தார். “I LOVE Wayanad” என்று அச்சிடப்பட்டிருந்த வெள்ளை நிற டிசர்ட் அணிந்துகொண்டு பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது அவரை பார்த்த ஆதரவாளர்கள் கரகோஷமிட்டனர். […]