கொரோனா பரவும் என்ற அச்சம் காரணமாக காஞ்சிபுரத்தில் உள்ள ஹுண்டாய் தொழிற்சாலையின் ஊழியர்கள் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதால்,இன்று முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அதனால்,காய்கறி மற்றும் மளிகைக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும்,சில நிபந்தனைகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்தவகையில்,காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஹுண்டாய் தொழிற்சாலை இந்த ஊரடங்கு காலத்திலும் இயங்கி […]