ரஷ்யாவில் ஹைபர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்படை கப்பலில் இருந்து வெண்கடலில் அதிநவீன ஏவுகணையான ஷிர்கான் ஹைபேர்சோனிக் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட்டது. 350 கி.மீ. தொலைவில் தரையில் உள்ள இலக்கில் இந்த ஏவுகணை சரியாக சென்றடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹைபேர்சோனிக் ஏவுகணையான ஷிர்கான் ஏவுகணை ஒலியை விட 9 மடங்கு வேகமாக செல்லக்கூடியது. இது 1000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் உடையது. இது குறித்து […]